புதுக்கோட்டை, ஜூலை 30 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வில் கவிஞர் எஸ்.கவி வர்மனின் கவிதை நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 7 ஆவது புதுக் கோட்டை புத்தகத் திருவிழா புதுக் கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு திட லில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 5 நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவின் 3 ஆம் நாளான திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கவிஞர் எஸ்.கவிவர்மன் எழுதிய ‘அந்த அழகிய நாட்கள்’ என்ற கவிதை நூலை, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வெளியிட, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கலைஞர் தமிழ்ச்சங்கத் தலைவர் த.சந்திரசேகரன், புதுக்கோட்டை தமிழ்ச்சங்கத் தலைவர் தங்கம்மூர்த்தி, கவிஞர் ஜீவி, கவிஞர் ரமா.ராமநாதன் மற்றும் அறிவியல் இயக்கப் பொறுப்பா ளர்கள் பங்கேற்றனர்.