districts

img

ஓய்வூதியர் சங்க தேசிய ஒருங்கிணைப்புக் குழு திருச்சி மாவட்ட துவக்க மாநாடு

திருச்சிராப்பள்ளி, அக்.3 - ஓய்வூதியர் சங்கங்கள் தேசிய ஒருங்கி ணைப்புக் குழுவின் திருச்சி மாவட்ட துவக்க மாநாடு மற்றும் உலக ஓய்வூதியர் தின விழா  திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் திங்க ளன்று நடைபெற்றது.  மாநாட்டிற்கு டிஆர்பியு மனோகரன் தலைமை வகித்தார். அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூ தியர்கள் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் டி.பி. சிவசுப்பிரமணியன் வரவேற்றார். டிஆர்பியு வெங்கடேசன், வருமான வரித்துறை ஓய்வூதி யர் சங்க கண்ணன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க தேவராஜன், அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதி யர் சங்க கோபால்சாமி, அஞ்சல் மூன்று செயலா ளர் கிரிபாலன், பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க  செயலாளர் சுந்தர்ராஜன், ஆர்எம்எஸ் ஊழியர் கள் சங்க செயலாளர் குணசேகரன் ஆகியோர்  வாழ்த்துரை ஆற்றினர். டிஆர்பியு மாநிலத்  தலைவர் ஆர்.இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். டிஆர்பியு என்.ராஜகோபால் தலைவ ராகவும், ஏஐபிஆர்பிஏ என்.கோபால்சாமி செய லாளராகவும், டிஆர்பியு கே.ரமேஷ் பொருளாள ராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்துத் துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண் டனர். ஏஐபிஆர்பிஏ என்.செல்வன் நன்றி கூறினார்.