districts

img

குத்தாலம் அரசுக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

மயிலாடுதுறை, அக்.18 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ததை கண்டித்தும், அடிப்படை வசதி களை உடனடியாக செய்து தரக் கோரியும்,  உரிமைக்காக போராடிய மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அநாகரிகமாக பேசிய கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுத்திட கோரியும் மயிலாடுதுறை ஆட்சி யர் அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செய லாளர் அமுல்காஸ்ட்ரோ மற்றும் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். மாணவர்களின் கோரிக்கையை பரிசீலித்து உரிய  நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, தற்காலி கமாக போராட்டத்தை கைவிட்டனர். குத்தாலம் அரசுக் கல்லூரி முதல்வரின் அடாவடித்தனத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாண வர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி யும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்வித்துறை அலட்சியமாக உள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்ற னர்.

;