districts

img

ரோட்டரி சங்கம் சார்பில் பசுவும் கன்றும் வழங்கல்

பாபநாசம், மே 18-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம் பேட்டை  டெல்டா ரோட்டரி சங்கத்தில் மாவட்ட ஆளுநர்  அலுவல் வருகை தின நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் திலகர் தலைமை வகித்தார். உதவி ஆளுநர் கண்ணன், மாவட்ட ஆளுநர் செல்வநாதன் கலந்து கொண்டனர்.

   நிகழ்வில், ஒரு குடும்பத்திற்கு பசு, கன்றினை தானமாக  வழங்கப்பட்டது. மேலும் அய்யம்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டிகளுக்கு டைல்ஸ் பதிக்கப்பட்ட பணியை  பார்வையிட்டு, அதைத் தொடர்ந்து பராமரிக்க ரோட்டரி சங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.