districts

img

தரமான உபகரணங்களை இலவசமாக வழங்குக! மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஆக.14 - தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்க திருச்சி மாவட்ட 4-வது மாநாடு ஞாயிறன்று சத்திரம் பேருந்து நிலை யம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் நடந்தது. மாநாட்டிற்கு மாநகர் மாவட்டத் தலை வர் ஜெயபால் தலைமை வகித்தார். சங்க  கொடியை மாவட்ட பொருளாளர் புஷ்பநாதன்  ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை அந்த நல்லூர் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி வாசித்தார். சிபிஎம் மத்தியக் கட்டுப் பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் துவக்க உரையாற்றினார். சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேலை அறிக் கையை மாவட்டச் செயலாளர் கோபிநாத் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் புஷ்பநாதன் சமர்ப்பித் தார்.  மாதாந்திர உதவித்தொகை ரூ.3000, கடு மையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கடனை அலைக்கழிக் காமல் வழங்க வேண்டும். தரமான உபகர ணங்களை இலவசமாக வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். தலைவராக எம்.கோபிநாத், செயலா ளர் பி.குமார், பொருளாளராக சி.புஷ்பநாதன்  உள்பட 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாநில செயலாளர் ஜீவா நன்றி கூறினார்.

;