districts

img

நவ.4,5,6 சிஐடியு மாநில மாநாடு திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு சுடர் பயணம் புறப்பாடு

மயிலாடுதுறை, நவ.2- இந்திய தொழிற்சங்க மையத் தின் (சிஐடியு) 15 ஆவது மாநில மாநாடு கன்னியாகுமரியில் நவம்பர் 4,5,6 தேதிகளில் நடை பெறுவதையொட்டி மயிலாடு துறை மாவட்டம், திருமெய்ஞானம் தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுடர் பயணம் புதனன்று புறப்பட் டது. கடந்த 1982 ஆம் ஆண்டு ஜன வரி 19 அன்று இந்திய தொழிற்சங்க மையம் அறைகூவல் விடுத்த அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டத்தின் போது அப்போ தைய அதிமுக முதலமைச்சர் எம்ஜி ஆரின் காவல்துறை, திருமெய் ஞானம் கிராமத்திற்குள் நுழைந்து  கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் அஞ்சான்,  நாகூரான் என்கிற இரு விவசாயக் கூலி தொழிலாளர்கள் குண்டடிப் பட்டு தியாக மரணமடைந்தனர். அவர்களின் நினைவாக திரு மெய்ஞானம் கிராமத்தில் அமைந்  துள்ள தியாகிகள் நினைவிடத்திலி ருந்து நினைவு சுடர் பயணம் புறப்  பட்ட நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மூத்த  தலைவர் ஆர்.ராமானுஜம் தலைமை வகித்து தியாகிகள் நினைவு சுடரை எடுத்து கொடுத்தார். தஞ்சை மாவட்டச் செயலாள ரும், பயணக் குழு தலைவருமான சி.ஜெயபால் சுடரை பெற்றுக் கொண்டார். சிஐடியு மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் ப. மாரியப்பன், மாவட்ட தலைவர்  ஆர்.ரவீந்திரன், மாவட்ட பொரு ளாளர் எம்.கலைச்செல்வன், தஞ்சை மாவட்டத்தலைவர் எம்.கண்ணன், மாவட்ட பொருளாளர் பேர்நீதி ஆழ்வார் ஆகியோர் பய ணக்குழுவில் இடம் பெற்றுள்ள னர்.  விவசாய சங்க மாவட்ட தலை வர் டி.சிம்சன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் ஜி. கலைச்செல்வி, மாவட்ட செயலா ளர் ஜி.வெண்ணிலா, வாலிபர் சங்  கம் பவுல் சத்தியராஜ், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் டி.ஆர்.ராணி,  விவசாய சங்க மாநிலக்குழு உறுப்  பினர் குணசுந்தரி, மீன் பீடித் தொழி லாளர் சங்கத்தின் அம்மையப்பன்,  கட்டுமான சங்கம் லெட்சுமணன் உள்ளிட்டோர் சுடர் பயணக்குழு வை வாழ்த்திப் பேசினர்.  திருமெய்ஞானத்திலிருந்து புறப்பட்டு திருக்கடையூர், ஆக்  கூர், செம்பனார்கோவில், மயிலாடு துறை வழியாக சென்ற சுடர் பய ணத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவிடைமருதூர்
திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு ஜோதி பயணம் புதனன்று மாலை திருவிடைமருதூர் கும்ப கோணத்திற்கு வந்தடைந்தது. தியாகிகளின் ஜோதி பயண குழு விற்கு சிபிஎம் மற்றும் சிஐடியு தொழி லாளர்கள் சார்பில் பி.ராமமூர்த்தி நினைவரங்கத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கும்பகோணம் தியாகிகளின் நினைவு ஜோதி பயணம் ஊர்வல மாக வந்து கும்பகோணம் காந்தி பூங்காவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

;