அறந்தாங்கி, ஜூன் 29-
மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது, மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி துவக்கி வைத்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வை யாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார்.
இக் கூட்டத்தில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 2023-24-ஆம் நிதி ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர வீதம் ஆறு மாதங்களுக்கு 200 மணி நேரம் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் உதவியுடன் முற்றிலும் எழுதப் படிக்க தெரியாத பெற்றோர்கள் மற்றும் உறவினர் களைக் கண்டறிய வேண்டும்.
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மூலம் தன்னார்வலர்கள் உதவியுடன் குடியிருப்புப் பகுதியில் முற்றிலும் எழுத படிக்க தெரியாத வரை கண்டறிதல் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.