districts

img

தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்

நாகர்கோவில், மார்ச் 4 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மணலிக்கரை புனித ஜோசப் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- துளிர் சார்பில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எளிய அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் பாடல்கள், விளையாட்டுகள்,  ஓவியம் தீட்டுதல்  போன்ற நிகழ்வுகளும்,  துளிர் திறனறிதல் தேர்வில் கலந்து கொண்ட 100-க்கு மேற்பட்ட மாணவர்க ளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.  பரிணாமக் கொள்கையின் தந்தை  சார்லஸ் டார்வின் மற்றும் ஒளிச் சிதறலைக் கண்டறிந்து வானம், கடல் ஏன் நீல நிறம் போன்ற கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம் தந்த  சர்.சி.வி. ராமன் ஆகிய விஞ்ஞானிகளின் முகமூடிகளை அணிந்து மாணவர்கள் தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாடினர். பள்ளித் தலைமை ஆசிரியர் நேவில் பிரபா, தலைமை வகித்தார். துளிர் பொறுப்பாசிரியர் மேரி செல்வ ராணி,  எமல்டா  ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.  மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.சசிகுமார், ஏ.விஜயலட்சுமி, ஜிஜினிதா, வி.ராஜம், சோனியா ஆகியோர் பயிற்சியளித்தனர்.