districts

img

முசிறி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ தியாகராஜன் திடீர் ஆய்வு அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை

முசிறி, ஜன.10 - திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் திங் கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  முசிறி நகராட்சியில் 24  வார்டுகள் உள்ளன. முசி றியை சுற்றி 100-க்கும் மேற் பட்ட குக்கிராமங்கள் உள்ளன.  இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பூச்சி கடித் தல், பிரசவிக்கும் பெண்கள் உள்பட பல்வேறு சிகிச்சை களுக்கு முசிறி அரசு மருத்து வமனையை நாடி வந்து சிகிச்சை பெற்று செல்வர்.  இந்த அரசு மருத்துவ மனையை சட்டமன்ற உறுப்பி னர் காடுவெட்டி ந.தியாகரா ஜன் திடீர் ஆய்வு மேற் கொண்டு மருத்துவமனை யின் அனைத்து பகுதிகளை யும் ஆய்வு செய்து, மருத்து வமனைக்கு தேவையான வச திகள் குறித்து மருத்துவர் களிடம் கேட்டறிந்தார். அப்போது மருத்து வர்கள்-செவிலியர்கள் சட்ட மன்ற உறுப்பினரிடம் கூறு கையில், கூடுதலாக செவி லியர்களை நியமிக்க வேண்டும்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள போதிய கூடுதல் பணியாளர்கள் தேவை. மருத்துவமனையின் சுற்றுச்சு வர்கள் மிகவும் தாழ்வாக உள்ளது. அவை உயர்த்தப் பட வேண்டும்.  நாள்தோறும் 500 முதல்  600 நோயாளிகள் சிகிச்சைக் காக இங்கு வந்து செல்கின்ற னர். இவர்களுக்கு போதிய இருக்கைகள் இல்லை. நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை போக்க அதிக இருக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ மனைக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி அமைத்து தர  வேண்டும். அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்துவ தற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகளை கேட்ட எம்.எல்.ஏ, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

;