தஞ்சாவூர், அக்.22 - மாதந்தோறும் ஊதியத்தைக் கால தாமதமின்றி வழங்க வேண்டும் என மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் வள்ளி, மாவட்டச் செயலர் சாய் சித்ரா தலைமையில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், துணைச் செயலாளர் கே.அன்பு முன்னி லையில் ஊழியர்கள் அளித்த கோரிக்கை மனு: மாத ஊதியத்தை ரூ. 5,500-லிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண் டும். தற்போது ஊழியர்களுக்கு வழங்கும் மாத ஊதியத்தை மிகவும் தாமதமாக வழங்குவதைத் தவிர்த்து, மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் கட்டாயம் வழங்க வேண்டும். ஸ்கோர் சீட் மார்க் என்ற பெயரில் ஊதியம் பிடித்தம் செய்வதைக் கைவிட வேண்டும். இரண்டு மணிநேர வேலை எனக் கூறிவிட்டு, 8 மணிநேரத்துக்கு மேலாகவும், பண்டிகை, வார விடு முறைகள் இல்லாமலும் வேலை வாங்கு வதை முறைப்படுத்தி பணி வரன் முறை செய்ய வேண்டும். இடைநிலை சுகாதார செவிலியர் மற்றும் கிராமப் புற சுகாதார செவிலியர்கள் ஆதிக்கம் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் மகப்பேறு கால ஊதியத்துடன் விடுப்பு, தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். மாத ஊதியத்தை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்க வேண்டும். பணி காலத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க பொறுப்பேற்க வேண்டும். மரணமடைந்த ஊழியர் களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ரத்த அழுத்த பரிசோதனை கருவி உப பொருள் பராமரிப்புச் செலவை நிர்வா கமே ஏற்றுக் கொள்ள வேண்டும். போக்குவரத்துப் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.