districts

மே 31 கரூரில் உள்ளூர் விடுமுறை

கரூர், மே 10-

    கரூர் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா மே 14 முதல் ஜூன் 11 வரை நடைபெற வுள்ளது.  

    விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே 31 (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது.  

    எனவே, மே 31 (புதன்கிழமை) அன்று மட்டும் கரூர்  மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.