பொன்னமராவதி, ஆக.14-
நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார வளமையத்தில் நடை பெற்றது. இதில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பங்கு, பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் ராமதிலகம் மற்றும் இலாகி ஜான் துவக்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் முன் னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு ஒருங்கி ணைப்பாளர் யசோதா மற்றும் ஆசிரியர் பயிற்று நர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்தனர். கருத்தாளர் களாக ஆசிரியர் பயிற்றுநர் அழகேசன் மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர் இளவரசி செயல்பட்டனர்.