கரூர், ஜன.19 - ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க கரூர் மாவட்ட ஆண்டுப் பேரவை கரூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் சி. முருகேசன் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் கே.வி.கணே சன் வரவு, செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் கே.ரெங்கராஜ் சிறப்புரையாற்றினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ப. சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். கரூர் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழி யர்கள், துப்புரவு பணியாளர்கள், வாகன ஓட்டிகள், டிபிசி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக் கும் ஒப்பந்தப்படி ரூ.600 ஒரு நாள் சம்பளமாக வழங்க வேண்டும். ஆனால் தற்போது ரூ.400 மட்டுமே ஒரு நாள் சம்பளமாக வழங்குகின்றனர். தொழி லாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் ரூ.200-க்கு கரூர் மாநகராட்சி நிர்வாகம் உடந்தையாக இருப்பதை ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர்கள் சங்கம் வன்மையாக கண்டிக் கிறது. ஊழியர்களுக்கு முழு தொகை யையும் வழங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சி நிர்வாகம் தொழிலா ளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் தொகையை கட்டுவதில்லை. தொடர்ந்து தொழிலாளர் விரோத மனப்பான்மை யுடன் செயல்படும் கரூர் மாநகராட்சி நிர்வாகம் இப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி, குளித்தலை, புகளூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களிடம் இருந்து நகராட்சி நிர்வாகம் ரூ.1500 பிடித்தம் செய்து பிஎஃப் தொகையாக ரூ.750 மட்டுமே கணக்கு காட்டுகிறார்கள். மீதம் 750-ஐ கணக்கில் காட்டாமல் மோசடி செய்கின்றனர். அதேபோல் நகராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டிய பிஎஃப் தொகையை கட்டுவதில்லை. குளித்தலை, பள்ளப்பட்டி, புகளூர் நகராட்சியில் பணியாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பல லட்சக் கணக்கான ரூபாய் நிதி மோசடி நடக்கிறது. இதில் தமிழக அரசு விசா ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.