districts

img

லயன்ஸ் கிளப் ஆளுநர் அலுவலர் வருகை விழா

பாபநாசம், மே 12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் ஆளுநர் அலுவல் வருகை விழா நடந்தது. முன்னதாக தலைவர் ராஜா முகமது வரவேற்றார். செயலர் ஜெகதீசன் சேவை அறிக்கை வாசித்தார்.  மாவட்ட ஆளுநரை மாவட்டத் தலைவர் ஆறுமுகம் அறிமுகம் செய்தார். மாவட்ட ஆளுநர் இமயவரம்பன் சிறப்புரையாற்றினார். மாவட்ட அவைப் பொருளாளர் ரவி, மாவட்ட அவை துணைப் பொருளாளர் ராமதாஸ், மாவட்ட நிதி அலுவலர் பழனியப்பன், மாவட்டத் தலைவர் சாய்ராம் குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் வாழ்த்தினர். இதில் மாவட்டத் தலைவர்கள், நிர்வாக அலுவலர் பாண்டியன், முன்னாள் தலைவர்கள், வருங்காலத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் ஜோதி நன்றி கூறினார்.