districts

img

கல்லக்குடி பேரூராட்சி மக்களுக்கு நகர்ப்புற வேலை வழங்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 20 -

      திருச்சி புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி பேரூராட்சியில் வசிக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமலாக்கம் செய்யவும், மனு கொடுத்த அனைவருக்கும் வேலை வழங்கவும் வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    கல்லக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். போராட்டத்தை சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை துவக்கி வைத்தார்.  

    கோரிக்கைகளை விளக்கி சங்க மாநிலப் பொருளாளர் அ.பழனிசாமி, மாவட்டத் தலைவர்  ஜே.சுப்பிரமணியன், மாநில குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜன், ஒன்றியச்  செயலாளர் குமார், ஒன்றிய துணைச் செயலா ளர் எம்.அடைக்கலராஜ், சிபிஎம் புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் டி.ரஜினிகாந்த், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கோமதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செல்லதுரை உள்ளிட்டோர் பேசினர்.

    முன்னதாக 500-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற பேரணி கல்லக்குடி கடைவீதி மாதா  கோயில் அருகிலிருந்து துவங்கி, கல்லக்குடி  பேரூராட்சி அலுவலகம் முன்பு நிறை வடைந்தது.  

    பின்னர் கல்லக்குடி பேரூராட்சி செயல்  அலுவலர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், இன்று மனு கொடுத்த 586  நபர்களும் கணினியில் பதிவேற்றம் செய் யப்படுவர். அதனடிப்படையில் அரசுக்கு உரிய முறையில் பரிந்துரைத்து வேலை வழங்குவதாக உறுதியளித்தனர். இதனையொட்டி போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.