districts

img

10 ஆண்டுகளுக்கும் மேலாக பாசன, வடிகால் வாய்க்கால்களை தூர்வாரவில்லை சிபிஎம் கண்டன போராட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 1 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தா லம் ஒன்றியம் சேத்தூர் ஊராட்சியில் விவசாயிகள் பாசனத்திற்கு பயன்ப டுத்தும் வடக்குவெளி வாய்க்கால்,  குஞ்சளைகட்டளை வடிகால் வாய்க்கால்களை கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக தூர்வாராமல் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர். இதனை கண்டித்து பெரம்பூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல்  போராட்டம் நடைபெற்றது. கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.ஜி. சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டா லின், ஒன்றியச் செயலாளர் சி.விஜய காந்த், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பி.பாஸ்கரன், ஜி.வைரவன், பி.ராமகுரு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உரையாற்றினர். சேத்தூர் ஊராட்சியில் உள்ள பாசன, வடிகால் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். பெரம்பூர், கடக்கம், முத்தூர், கொடைவிளாகம், எடக்குடி, கிளியனூர் ஊராட்சிகளில் உள்ள  வாய்க்கால்களை குடிமராமத்து பணி யில் சரிவர தூர்வாராமல் முறைகேட் டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது.  போராட்டத்தை தொடர்ந்து அதி காரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத் தனர். இதனால் சாலை மறியல் போராட்டத்தை ஆர்ப்பாட்டமாக நடத்தினர். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில்,  உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

;