tamilnadu

img

வில்சன் படுகொலை சிபிஎம் கண்டன போராட்டம்

நாகர்கோவில், ஜன.17- களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவல்துறை சிறப்பு உதவி  ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்ப ட்டதை கண்டித்தும், இந்த கொலை வழக்கை  முறையாக புலன் விசாரணை செய்ய வலி யுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் களியக்காவிளை சந்திப்பில் கண்டன  தர்ணா போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார்.  கேரள சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ஹரீந்தி ரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  என்.முருகேசன், பி.விஜயமோகனன், கே. மாதவன், வட்டாரச் செயலாளர் வி.அனந்த சேகர், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ் ஆகியோர் பேசினர். கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்டாரகுழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.