மதுரை, ஏப்.26- மக்களுக்குத் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத் தில், மதுரை சிக்கந்தர் சாவடி, வேளாண் உணவு வர்த்தக மையத் தில் செயல்பட்டுவரும் “AFTC உணவுப் பொருள் ஆய்வுக் கூடத் திற்கு” தேசிய ஆய்வக அங்கீகா ரம் (NABL Accreditation) கிடைக் கப் பெற்றுள்ளது. உணவுப் பொருள் பதனீட்டா ளர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் விற்பனையாளர்கள் இந்த ஆய்வ கத்தைப் பயன்படுத்திக் கொள்ளு மாறு, வர்த்தக மையத்தின் தலை வரும், மேலாண்மை இயக்குநரு மாக எஸ்.இரத்தினவேல் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை உணவுப் பொருள் பதனீடு மற் றும் தயாரிப்பு நிறுவனங்கள், ஒவ் வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை தங்களது தயாரிப்புப் பொருட் களை, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு, தேசிய ஆய்வக அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் (NABL Accredited Laboratory) ஆய்வு செய்து அந்த ஆய்வகம் அளிக்கும் தரச் சான்றை FSSAI தளத் தில் (Portal) பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயமாகும். அத்து டன் உணவுப் பொருள் வியாபாரி கள் தாங்கள் வணிகம் செய்யும் உணவுப் பொருட்கள் FSSAI சட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள தரங்க ளுக்கு (Standards) ஏற்ப உள்ள னவா என்பதை இம்மாதிரியான NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வ கத்தில் உறுதிப்படுத்திக் கொண்டு வணிகம் செய்ய அறிவுறுத்து கிறோம். வேளாண் உணவுப்பொருட் கள் பதனீடு மற்றும் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் சட்டப்பூர்வமான இத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், வியா பாரிகளுக்கு உதவும் வகையிலும், மக்களுக்குத் தரமான உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் மதுரை சிக் கந்தர் சாவடியில் உள்ள வேளாண் உணவு வர்த்தக மையத்தில் (Agro Food Trade Centre-AFTC) செயல் பட்டுவரும் “AFTC உணவுப் பொருள் ஆய்வுக் கூடத்திற்கு” (NABL Accreditation -National Accreditation Board for Testing and Calibration Laboratories) பெற்றுள்ளோம். தஞ்சாவூர் NIFTEM (National Institute of Food Technology, Entrepreneurship and Management) இயக்குநர் டாக்டர் சிங்காரவடிவேல் தலைமையில் தகுதியான ஆய்வாளர்களுடன் இந்த ஆய்வகம் செயல்படுகிறது. இந்த ஆய்வகத்தில் அரிசி, கோதுமை, உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு, மாவு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவு எண்ணெய், மசாலா பொருட்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா, போன்ற அனைத்து உண வுப் பொருட்களும் FSSAI சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப் பெற்று சான்று வழங்கப்படுகிறது. இந்த ஆய்வகம் உணவுப் பொருட்களில் 283 வகையான ஆய்வுகளை செய்யும் வசதி பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது. உணவுப் பொருட்கள் பத னீட்டாளர்களும், தயாரிப்பாளர் களும், வணிகர்களும் இந்த ஆய்வ கத்தைப் பயன்படுத்தி மக்க ளுக்குத் தரமான பொருட்கள் கிடைக் கச் செய்ய வேண்டுகிறோம். மேலும், இந்த ஆய்வக சேவை விவரங்களுக்கு அலைபேசி எண். 93637 96637 அல்லது மின்அஞ்சல் foodtest@aftc.in மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.