districts

img

கும்பகோணம் மாநகராட்சியில் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு உற்சாக வரவேற்பு

கும்பகோணம், ஏப்.5 - ‘இந்தியா’ கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பா ளர் வழக்கறிஞர் ஆர்.சுதா கை சின்னத்திற்கு  வாக்குக் கேட்டு, தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் மாநகராட்சி, கஸ்தூரிபாய் சாலை யில் பிரச்சாரம் மேற்கொண்டார்.  பின்பு, மாநகராட்சி பகுதிகள் முழுவதும் வாக்குச் சேகரித்தார். வாக்காளர்கள், வேட் பாளர் சுதாவுக்கு ஆரத்தி எடுத்து, ‘வெற்றி  உங்களுக்கே’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்த னர்.  வாக்குச் சேகரிப்பின் போது தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினரு மான சு.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் செ.இராம லிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக் கோட்டை க.அன்பழகன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவும் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கோவி.செழி யன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும் மாநகர திமுக செயலாளர் சு.ப. தமிழழகன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பி னர் செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர்  கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.