தஞ்சாவூர், ஏப்.30 -
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சியில், சொக்கநாதபுரம் ஒத்தக் கடையில், சனிக்கிழமை அதிகாலை நான்கு மணியள வில், கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு தீப்பற்றி எரிந்தது சாம்பலானது. தகவலறிந்த பேரா வூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், சேது பாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர், மு.கி.முத்து மாணிக்கம், ஊராட்சி மன்றத் தலைவர் ராம்பிரசாத், அப்துல் மஜீது, தனபால், ஒன்றியக் குழு உறுப்பினர் ராசேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காய் கறி, மளிகை சாமான், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூபாய் 5,000 ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் வழங்கினார்.