districts

50 விழுக்காடு மானியத்தில் உளுந்து விதைகள் பெறலாம்

பட்டுக்கோட்டை, ஏப்.19-  

  பட்டுக்கோட்டை வேளாண் வட்டாரத்தில் 50 விழுக்காடு மானியத்தில் சித்திரைப் பட்ட உளுந்து விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘நெற்பயிரானது நிலத்தில் உள்ள சத்துகள் அனைத்தையும் உறிஞ்சிக் கொள்வதால் நிலம் பாதிக்கப்படுகிறது. எனவே உளுந்து சாகுபடி செய்யும் போது வளிமண்டல நைட்ரஜன் மண்ணில் நிலைநிறுத்தி மண்வளம் மேம்படுகிறது.  

  மேலும் மண்ணரிப்பை கட்டுப்படுத்துவதுடன் அதன் ஆழமான வேர் அமைப்பும், பசுமையாக நிலத்தை மூடி இருப்பதால் களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது.  

  எனவே தற்போது சித்திரைப் பட்டத்திற்கு ஏற்ற வம்பன் 8 ரக உளுந்து விதையானது பட்டுக்கோட்டை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  

  இந்த உளுந்து விதை 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே உளுந்து விதை தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.