districts

img

சமுதாயக் கூடத்தில் இயங்கும் குத்தாலம் அரசுக் கல்லூரி: மாணவர் சங்கம் போராட்டம்

மயிலாடுதுறை, அக்.7 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தா லம் (மாதிரிமங்கலம்) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய  கட்டிடம் கட்ட வலியுறுத்தியும், தற்போது செயல்படும் இடத்திலிருந்து மாற்று இடத்திற்கு மாற்றி அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கடந்த வாரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிடும் போராட்டத்தை நடத்திய  போது, உடனடியாக நடவடிக்கை எடுத்து கோரிக்கையை நிறைவேற்று வதாக அதிகாரிகளும், கல்லூரி நிர்வாக மும் உறுதியளித்தது. ஆனால் எந்தவித  நடவடிக்கையும் எடுக்காமல், போராட்டத் தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளையும், மாணவர்களையும் கல்லூரியின் முதல்வர் விஜயேந்திரன் அவதூறாக பேசி, கல்லூரியில் செயல்படும் சமுதாயக்கூடத்தை பூட்டி மாணவர்களை வெளியேற்றியுள்ளார். இதை கண்டித்து சங்கத்தின் கல்லூரி நிர்வாகி ஈஸ்வரன் தலைமையில் வியா ழனன்று வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்நிலையில் 2 ஆவது நாளான வெள்ளியன்றும் வகுப்புகளை புறக் கணித்து கல்லூரி முன்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ,  மாவட்டத் தலைவர் மணிபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் தீபா, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆதித்யன், லெனின் குத்தாலம் ஒன்றிய தலைவர்  பிரகாஷ் உள்ளிட்டோர் போராட்டத்தில் உரையாற்றினர். குத்தாலம் மாதிரிமங்கலம் பகுதி யில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  (அதிமுக ஆட்சி) அரசு கலை மற்றும்  அறிவியல் கலைக் கல்லூரி துவங்கப் பட்டது.

போதுமான இடவசதி மற்றும்  அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டி டத்தை தேர்வு செய்து, கல்லூரியை துவக்காமல் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் கல்லூரியை (சமுதாயக் கூடம்) துவக்கியுள்ளனர்.  200 லிருந்து 300 மாணவர்கள் வரை கல்வி பயின்று வந்த இக்கல்லூரியில், தற்போது சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். குத்தா லம், மேக்கரிமங்கலம், மாதிரிமங்க லம், மல்லியம், மூவலூர், நரசிங்கன் பேட்டை, திருவாலங்காடு, சேத்தூர், பெரம்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங் களிலிருந்து மட்டுமல்லாமல் அருகி லுள்ள மாவட்டங்களிலிருந்தும் வந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  ஆனால் இக்கல்லூரியில் எந்தவித  அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி கல்லூரி ஆசிரியர்களும், அலுவலர் களும் நாள்தோறும் பெரும் சிரமத்தை  அனுபவித்து வருகின்றனர். கடும் இடநெருக்கடி ஒருபுறம் என்றால் ஆண்,  பெண் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு என எல்லோருக்கும் ஒரே கழிப்பறை தான் உள்ளது. மேலும் தண்ணீர் வசதி பெரும் கேள்விக்குறியாக உள்ளது.  இந்நிலையில்தான் இந்திய மாண வர் சங்கத்தின் தலைமையில் போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. மாண வர் சங்க நிர்வாகிகளையும், மாண வர்களையும் அவதூறாக பேசிய கல்லூரி முதல்வர் மன்னிப்பு கேட்டால் தான் போராட்டத்தை கைவிடுவோம் எனக்கூறி, 2 ஆவது நாளாக போராட் டத்தில் ஈடுபட்டனர்.

;