districts

img

தேர்தல் சிறப்பு நிதி வழங்கல்

கரூரில் நடைபெற்ற சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் திருச்சி, கரூர் மண்டல துணை பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தேர்தல் சிறப்பு நிதியாக ரூ.5000-ஐ சிஐடியு மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் உடனிருந்தனர். அவருக்கு சிஐடியு மாவட்டக் குழு சார்பாக வாழ்த்து தெரிவித்தனர்.