districts

img

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்குக! பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 2-  

    மல்யுத்த வீராங்கனைகள் பாலி யல் குற்றம் சுமத்தியுள்ள பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  மாநிலம் முழுவதும் மாதர், வாலி பர், மாணவர் அமைப்புகளின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

    வினேஷ் போகத், சாக் ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்க னைகள், இந்திய மல்யுத்த கூட்ட மைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தங்களை  பாலியல் துன்புறுத்தல் செய்ததாக  கடந்த ஜனவரி 18 அன்று குற்றம் சாட்டினர். இந்தப் புகாரின் அடிப்ப டையில் தில்லி போலீசார் முறை யான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மல்யுத்த வீரங்கனைகள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங் கனைகள் மீதே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

   இந்நிலையில், பாலியல் குற்றம்  சுமத்தப்பட்ட பாஜக எம்பியை பதவி  நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க  வேண்டும். மல்யுத்த வீராங்கனை கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம், இந்திய மாணவர் சங்கம்  ஆகிய அமைப்புகளின் சார்பில்  வெள்ளிக்கிழமையன்று புதுக் கோட்டை தபால் நிலைய முற்றுகை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் பி.சுசீலா தலைமை வகித்தார். வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் ஆ.குமார வேல், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். நிர்வாகிகள் டி.சலோமி, எஸ். பாண்டிச்செல்வி, எஸ்.சந்தோஷ் குமார், எம்.மகாலெட்சுமி, முத்து மாரி, டேவிட் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

திருச்சிராப்பள்ளி

    திருச்சி தபால் நிலையம் முன்பு  நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கங்களின் மாவட்டத் தலைவர் கள் (வாலிபர்) லெனின், (மாணவர்)  சூரியா, (மாதர்) பொன்மகள் ஆகி யோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர்கள் (வாலி பர்) சேதுபதி, (மாணவர்)  மோகன்,  (மாதர்) சரஸ்வதி ஆகியோர் விளக்கிப் பேசினர்.  

    பின்னர் பேரணியாக வந்து  தபால் நிலையத்தை முற்றுகை யிட முயன்றனர். அப்போது தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் குண்டு கட்டாக  தூக்கிச் சென்று வேனில் ஏற்றி கைது  செய்தனர்.

தஞ்சாவூர்

     தஞ்சாவூர் தலைமை தபால் நிலையத்தை, மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம்  சார்பில் முற்றுகையிட்டு நடை பெற்ற போராட்டத்திற்கு, மாவட்டச்  செயலாளர்கள் சந்துரு (மாண வர்), ஆம்பல் துரை.ஏசுராஜா (வாலிபர்), ஆர்.கலைச்செல்வி (மாதர்) ஆகியோர் தலைமை வகித் தனர்.

   இதில், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, இந்திய மாணவர் சங்க மாநிலச்  செயலாளர் கே.நிருபன் சக்கர வர்த்தி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே.அருளரசன், மாண வர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜூன், மாதர் சங்க மாவட்ட பொரு ளாளர் என்.வசந்தா, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வனரோஜா, முன் னாள் மாவட்டச் செயலர் எம். மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

   போராட்டத்தில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகை யிட்டும், ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும் போராட்டத் தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட  41 பேரை தஞ்சாவூர் கிழக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.  

மயிலாடுதுறை

     மயிலாடுதுறை தலைமை தபால் நிலைய முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாண வர் சங்க மாநிலத் தலைவர் கோ. அரவிந்தசாமி தலைமை வகித்தார்.  

     வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் அறிவழகன், மாவட்டத் தலை வர் அய்யப்பன், மாதர் சங்க  மாவட்டச் செயலாளர்  வெண் ணிலா, மாணவர் சங்க மாவட்டச்  செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாவட்டத் தலைவர் மணிபாரதி, வாலிபர் சங்க மாநிலச் செயற் குழு உறுப்பினர் ஆனந்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  

   முன்னதாக நீதிமன்ற சாலை யிலிருந்து கண்டன முழக்கமிட்டு ஏராளமானோர் பேரணியாக வந்து  தபால் நிலையத்தை முற்றுகை யிட முயன்றவர்களை காவல்துறை யினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டு போராட்டத்தில் ஈடு பட்டவர்களை கைது செய்து தனி யார் மண்டபத்தில் தங்க வைத்த னர்.