தஞ்சாவூர், ஆக.18-
தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி அருகே செங்கமங்க லம் - அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஜெனிவா (ஜே.ஆர்.சி) ஒப்பந்த நாள் விழா நடந்தது.
இளையோர் செஞ் சிலுவை சங்க மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பிச்சைமணி தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சத்திய மூர்த்தி வரவேற்றார். பள்ளித் தாளாளர் வழக்குரைஞர் வீ.ஏ.டி.சாமியப் பன் விழாவை தொடங்கி வைத்தார். வட்டாட் சியர் த.சுகுமார் ஜே.ஆர்.சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதையொட்டி மாணவர்களுக்கு போட்டி கள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாண வர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தலைமை ஆசிரியர் கணேசன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சேகர் நன்றி கூறினார்.