டிஎன்சிஎஸ்சி சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.மோகன் இல்ல திருமண விழா திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, மணமக்கள் எம்.எழிலரசன்-எம்.இலக்கியா ஆகியோருக்கு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். விழாவில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், வர்க்க வெகுஜன அமைப்பினர் கலந்து கொண்டனர்.