அரியலூர், பிப்.9- அரியலூர் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் பல் மற்றும் கண் பரிசோதனை முகாம் டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை, வேல் மொபைல் பல் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. கல்வி நிலையச் செயலர் புகழேந்தி தலைமை வகித்தார். பல் மற்றும் கண் மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில், பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தர ராஜன், மருத்துவர் தங்கவேல், அகர்வால் கண் மருத்துவ மனை உதவி மேலாளர் கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.