districts

img

இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா

மயிலாடுதுறை, ஜன.28-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் காலம நல்லூர், மருதம்பள்ளம் ஊராட்சி களில் மீனவ மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், துணை தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார்  தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா  எம்.முருகன் ஆகியோர் காலமாநல்லூர் ஊராட்சி சின்னமேடு மீனவர்கள் 149 குடும்பத்திற்கும், மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி மீனவர்கள் 25 குடும்பத்திற்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினர். விழாவில் தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி  அலுவலர் மீனா,  திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.