districts

img

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்க! விவசாயிகள் சங்க திருச்சி மாநகர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 26 - தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாநகர் மாவட்ட 2-வது மாநாடு செவ்வாய்க்கிழமை காட்டூர் சக்தி மினி ஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணைத்தலை வர் சிவகுமார் தலைமை வகித்தார்.  வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் கே.சி.பாண்டியன் வாசித் தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் தனபால் சமர்ப்பித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் கார்த்திகேயன், மாதர் சங்க மாவட்ட  தலைவர் ரேணுகா, விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் தங்கதுரை, சிபிஎம் ஒன்றியச் செய லாளர் மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முகமதுஅலி, மாநில செய லாளர் சாமி.நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  திருவெறும்பூர் நாட்ராயன் கழிங்கி முதல் கவுறு மற்றும் கிளி  வாய்க்கால்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். திருவெறும்பூர் மாரி யம்மன் கோவில் பின்புறம் உள்ள மூடிய செம்படை வடிகால்  வாய்க்காலை தூர்வார வேண்டும்.  மணிகண்டம் 3ம் எண் வாய்க்கால் பாசனத்திற்கு கட்டளை கால்வாயில் தடுப்பு கட்டிக் கொடுக்க வேண்டும். 3ம் எண் வாய்க்காலில் இருந்து பூங் குடிக்கு செல்லும் உடைபட்ட ஷட்டரை சீரமைக்க வேண்டும். விவ சாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ண யம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவ ராக கே.சி.பாண்டியன், செயலாள ராக நா.கார்த்திகேயன், பொருளாள ராக டி.தனபால், துணைத் தலைவர் களாக ஏ.வேலுச்சாமி, டி.என்.பி.பிர காசமூர்த்தி, துணைச் செயலாளர் களாக எம்.சங்கர், எம்.செந்தில் உள்பட 15 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.

;