districts

img

தோழர் நா.பாலசுப்பிரமணியன் முதலாம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம்

மன்னார்குடி, நவ.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னரும் ஊரக வளர்ச்சி உள்  ளாட்சித் துறை ஊழியர்  சங்கத்தின் முன்னாள் மாநி லத் தலைவருமான தோழர் நா.பாலசுப்பிரமணியன் முத லாம் ஆண்டு நினைவு தின  கருத்தரங்கம் நடைபெற் றது. ஊரக வளர்ச்சி உள்ளாட்  சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பாக கூத்தாநல்லூர் பூத மங்கலத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, மாவட்ட தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர்கள் ஏபிடி லோகநாயகி, எஸ்.காமராஜ், டீ.கலியமூர்த்தி, கே.ஆறு முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிபிஎம் மாவட்டச் செய லாளர் சுந்தரமூர்த்தி, சிஐ டியு இணைப்பு சங்க தலை வர்கள் ஆர்.குமாரராஜா, டி. முருகையன், எம்.கே.என். அனிபா, எல்.வைத்திய நாதன், ஏ.பிரேமா, பி.என். லெனின் உள்ளிட்டோர் உரையாற்றினர். தீக்கதிர் நாளிதழின் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் ஐ.வி.நாக ராஜன் தோழர் நா.பாலசுப்பி ரமணியம் உருவப் படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சிறப்பு ரையாற்றினார். சங்கத்தின் அனைத்து நிலை பொறுப் பாளர்களும் கிளை உறுப்பி னர்களும் கலந்து கொண்ட னர். மன்னார்குடி நகரக் குழு வின் சார்பாக சிபிஎம் அலு வலகத்தில் தோழர் நா.பால சுப்பிரமணியன் உருவப் படத்திற்கு நகரக் குழு  உறுப்பினர் ஏ.பி.தனுஷ்  கோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற கூட்டத் திற்கு நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன் தலைமை வகித்தார். சிஐடியு மற்றும் இணைப்புச் சங்க நிர்வாகி கள் பேசினர்.