தஞ்சாவூர், நவ.5 - பயிர் கடன், பயிர் காப்பீடு, நெல் விற்பனைக்கு ஒரே சிட்டா அடங்கலை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலி யுறுத்தினர். தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லர் தெ.தியாகராஜன், வேளாண்மை, கூட்டுறவுத்துறை, மின்வாரியம், நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் விவசாயிகள், “கடந்த 2023 ஆம் ஆண்டு சக்கரசாமந்தம் கிராமத்தில் பயிர் காப்பீடு செய்த விவ சாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க வில்லை. மற்ற கிராம விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விடு பட்ட எங்களது கிராம விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஒரத்தநாடு அருகே பாச்சூர் கிராமத் தில் ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தினை அளந்து மீட்க வேண்டும். திருப்புறம்பியம் கிரா மத்தில் 900 ஏக்கர் பயன்படும் வகை யில் முத்துக்கருப்பன் வாய்க்கால் உள்ளது. 30 ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் இருந்த இந்த வாய்க்கால் தற்போது ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு சொட்டுகூட தண்ணீர் வரவில்லை. மாவட்டம் முழுவதும் பயிர் கடன் வாங்க, பயிர் காப்பீடு செய்ய, நெல் அறுவடை செய்யும் போது கொள்முதல் நிலையத்துக்கு என ஒரு சாகுபடியில் மூன்று முறை கிராம நிர்வாக அலுவல ரிடம் அலைந்து திரிந்து அடங்கல் வாங்க வேண்டியுள்ளது. எனவே ஒருமுறை மட்டுமே அடங்கல் வாங்கி அதனை மூன்றுக்கும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். விவசாயத்துக்கு இலவச மின்சா ரம் கேட்டு தட்கலில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உடனே இணைப்பு வழங்க வேண்டும். சம்பா, தாளடி நெல் சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே பயிர் காப்பீடு பிரிமீ யம் செலுத்த நவ.15 என்பதை நீட்டித்து கால அவகாசம் பெற்றுத் தர வேண்டும். கார்த்திகை பட்டத்தில் மானா வாரி பகுதியில் நிலக்கடலை விதைப்பு தொடங்க இருப்பதால், வேளாண்மைத் துறையினர் தரமான கடலை விதை களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். கரும்பு வெட்டுக்கூலியை ஆலை நிர்வா கமே ஏற்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங் களில் தண்ணீர் வயல்களுக்கு பாய வில்லை. எனவே, முறைப்பாசன முறையை கைவிட்டு, முழுமையாக தண்ணீர் திறந்து விட வேண்டும். மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப் பட்டதால், வழக்கமாக மூடும் ஜன.28-க்கு பதில் ஒரு மாதம் காலம் தாழ்த்தி மேட்டூர் அணையை மூட வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர். விவசாயிகளின் கோரிக்கை களுக்கு அவ்வப்போது மாவட்ட ஆட்சி யர் மற்றும் அலுவலர்கள் பதிலளித்தனர்.