districts

img

வ.உ.சி வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனம் மயிலாடுதுறை ஆட்சியர் துவக்கி வைப்பு

மயிலாடுதுறை, ஏப்.18 - மயிலாடுதுறை செயின் பால்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 150-வது பிறந்த  நாளையொட்டி அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து  நகரும் புகைப்படக் கண்காட்சி  வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா திங்க ளன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  வ.உ.சி யின் வரலாற்றை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடப்பட்ட அரசு பேருந்தில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் செல்லும் வகையில் 1.11.2021 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த  நகரும் புகைப்படக் கண்காட்சி திங்களன்று  செயின் பால்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து மயி லாடுதுறை டி.ஜி.என் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, டி.பி. டி.ஆர் திவான் பகதூர் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, கிட்டப்பா நகராட்சி மேல் நிலைப்பள்ளி, ஸ்ரீ குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருஇந்தளூர் நக ராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி களில் முற்பகலில் தொடர்ந்து, பிற்பகல் 2 மணி  முதல் 5 மணி வரை குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, குத்தாலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வானாதிராஜபுரம் அரசு  உயர்நிலைப்பள்ளி, திருமணஞ்சேரி அரசு  உயர்நிலைப்பள்ளி, தேரிழந்தூர் அரசு உயர் நிலைப்பள்ளி கம்பர் அரசு மேல்நிலைப் பள்ளி, குத்தாலம், ராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில்  காட்சிப்படுத்தப்படு கிறது.  தொடர்ந்து 19.4.2022 காலை 10 மணி முதல்  மதியம் 1 மணி வரை சீர்காழி எஸ்.உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, சியாமளா பெண்கள்  உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி எம்.எம்.சி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெஸ்ட் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி, அகணி அரசு உயர்நிலைப் பள்ளியைத் தொடர்ந்து, பிற்பகல் 2 மணி  முதல் காலை 5 மணி வரை செம்பனார் கோயில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆறுபாதி சம்மந்தம் உதவி பெறும் மேல்நி லைப்பள்ளி, ஆறுபாதி அரசு மேல்நிலைப் பள்ளி, கீழையூர் திருவேங்கடம் உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, ஆக்கூர் அரசு மேல் நிலைப்பள்ளி, ஆக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செம்பனார்கோயில் தாமரை மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் காட்சிப்படுத்த  திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர போராட்டம் குறித்து எளிய முறை யில் விளக்கப்படும்.  முன்னதாக கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி, வாகனத்தில் அமைக் கப்பட்டுள்ள அன்னாரின் உருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி யர் இரா.லலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

;