districts

img

சிஐடியு நடைபயணப் பிரச்சாரத்திற்கு உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை, மே 29-  

      இந்திய தொழிற்சங்க மையம்  (சிஐடியு) நடைபயணக் குழுவின ருக்கு புதுக்கோட்டை மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் ஞாயி றன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்  பட்டது.

     மக்களை வாட்டி வதைக்கும் ஒன்றிய அரசின் நவீன தாராளமயக்  கொள்கையை எதிர்த்தும், கடுமை யான உயர்ந்து வரும் விலைவாசி  உயர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், முன்னெப்போதும் இல் லாத அளவுக்கு உருவெடுத்துள்ள வேலையின்மைக்கு தீர்வுகாண வலியுறுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கை களை முன்வைத்து தமிழகத்தின் 7 முனைகளில் இருந்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்  பில் மே 20 முதல் 30 வரை பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் களி யக்காவிளையில் இருந்து சிஐடியு  மாநில உதவிப் பொதுச் செயலா ளர் தலைமையில், மாநிலச் செய லாளர் கே.தங்கமோகனன் உள்  ளிட்டோர் கொண்ட பயணக் குழு வினருக்கு புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி, குளவாய்ப்பட்டி, வல்லத்திராகோட்டை, புதுக் கோட்டை, முத்துடையான்பட்டி, சத்தியமங்கலம், நார்த்தாமலை, கீரனூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்  பான வரவேற்பு அளிக்கப்பட்டன.  நடைபயணக் குழுவினரை வாழ்த்தி கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை மரியாதை செய்தார்.

   புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பால சுப்பிரமணியன் தலைமை வகித் தார். துணைச் செயலாளர் ஆர். மணிமாறன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில  உதவிப் பொதுச் செயலாளர் வி. குமார், துணைத் தலைவர் பி.சிங்கா ரன், மாநிலச் செயலாளர்கள் கே. தங்கமோகன், எம்.சிவாஜி, இரா.பேச்சிமுத்து, ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவ மணி உள்ளிட்டோர் பேசினர்.

திருச்சிராப்பள்ளி

     கோவையில் இருந்து சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி  குமார் தலைமையில், மாநிலச் செய லாளர் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கி ணைப்பில் பிரச்சார நடைபய ணத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். கோவையில் துவங்கிய நடைபயணம் கோவை  மாநகரம், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக திருச்சி யை வந்தடைந்தது. திருச்சி வந்த  பிரச்சார நடைபயண குழுவின ருக்கு மண்ணச்சநல்லூரில், கட்டு மான சங்க மாவட்ட செயலாளர் பூமாலை, சிஐடியு ஆட்டோ மாவட்  டச் செயலாளர் சேகர் ஆகியோர்  தலைமையில் ஞாயிறன்று தப் பாட்டம், வாணவேடிக்கையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  

    பின்னர், மண்ணச்சநல்லூர் -எதுமலை பிரிவு ரோடு அருகே நடைபெற்ற பிரச்சார நடைபயண வரவேற்பு கூட்டத்தில் சிபிஎம் புற நகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன், ஒன்றியச் செயலாளர் மனோ கரன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள், சிஐடியு மாவட்டச் செய லாளர் சிவராஜ், மாவட்டத் தலை வர் சம்பத், மாவட்டப் பொருளா ளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  

    இதேபோல், திருச்சி வந்த  பிரச்சார நடைபயண குழுவின ருக்கு தீரன்நகர் பகுதியில் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்க பொதுச்செயலா ளர் கருணாநிதி தலைமையில் திங்க ளன்று சிறப்பான வரவேற்று அளிக்  கப்பட்டது.

   போக்குவரத்து கழக தீரன்நகர்  கிளை பணிமனை முன்பு நடை பெற்ற நடைபயண பிரச்சார வர வேற்பு கூட்டத்தில் சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் சீனி வாசன், போக்குவரத்து சங்க துணை பொதுச் செயலாளர்கள் பாலசுப்ரமணியன், முருகேசன்,  அசோகன், தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி, குடி நீர் வடிகால் வாரிய சங்க மாவட்டச் செயலாளர் மருதராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தஞ்சாவூர்

    தஞ்சையில் சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன் தலைமையில், பய ணக் குழு ஒருங்கிணைப்பாளர் மாநி லச் செயலாளர் சி.ஜெயபால்,  கடலூர் மாவட்டச் செயலாளர் பழனிவேல், நாகை மாவட்டச் செய லாளர் தங்கமணி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் மாரியப்பன், திருவாரூர் மாவட்ட பொருளாளர்  மாதவி, தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, அரியலூர் மாவட்ட பொதுச் செய லாளர் சகுந்தலா ஆகியோர் இடம்  பெற்றுள்ள பயணக் குழுவுக்கு, விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை, பழைய பேருந்து நிலையம், சாந்தி கமலா தியேட்டர், எல்ஐசி, ரயிலடி, மேரீஸ் கார்னர், மின்வாரிய மேற்பார்வை கட்டச் செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், பட்டாசு வெடித்தும், உற்சாக முழக்கங்கள் எழுப்பியும், தஞ்சையின் பாரம்பரி யத்தை பறைசாற்றும் தலை யாட்டி பொம்மை வழங்கியும், பய ணக் குழுவிற்கு உற்சாக வரவேற்ப ளிக்கப்பட்டது.

     இதனைத் தொடர்ந்து, வல்லம்  வழியாக திருச்சி நோக்கி புறப்பட்ட  பயணக் குழுவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் கொடிய சைத்து பயணக் குழுவை துவக்கி  வைத்தார். சிஐடியு மாவட்ட பொரு ளாளர் பி.என்.பேர்நீதிஆழ்வார், துணைத் தலைவர் எஸ்.ராஜா ராமன், விரைவுப் போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் பி. வெங்கடேசன், அரசுப்போக்கு வரத்துக் கழக மண்டல தலைவர் காரல் மார்க்ஸ், மருந்து விற்பனை  பிரதிநிதிகள் சங்கம் பாலமுருகன்,  ஆட்டோ சங்கம் ராஜா, அரசு ஊழி யர் சங்கம் ரெங்கசாமி, எல்ஐசி ஊழி யர் சங்கம் செல்வராஜ், தரைக்கடை  சங்கம் மில்லர்பிரபு, ஓய்வூதியர் சங்  கம் கலியமூர்த்தி, கட்டுமான சங்கம்  இ.டி.எஸ்.மூர்த்தி, சுமைப்பணி தொழிலாளர் சங்கம் த.முருகே சன், மின் ஊழியர் மத்திய அமைப்பு காணிக்கைராஜ், மக்களைத் தேடி  மருத்துவ திட்டம் சாய்சித்ரா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

   தொடர்ந்து வல்லம் கடைவீதி யில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி யில், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் கே.அபிமன்னன், மாற்றுத் திற னாளிகள் சங்க மாவட்டச் செயலா ளர் பி.எம்.இளங்கோவன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், சிஐ டியு து.கோவிந்தராஜ் ஆகியோர் வரவேற்பளித்தனர்.

;