பேராவூரணி, அக்.6 - தீக்கதிர் செய்தி எதிரொலியாக சேதுபா வாசத்திரம் ஊராட்சியில் பொதுப்பாதையில், சாலை அமைக்க இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் யாதவர் தெருவில் உள்ள சாலை இரண்டு இடங்களில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இடையூறாக இருந்து வந்தது. யாதவர் தெருவில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், ஆக்கிரமிப்பு காரணமாக நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியு மாக இருந்தது, இதனால் இச்சாலையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள், மீனவர் காலனி, புது மனைத் தெரு, பள்ளிவாசல் தெரு பகுதிக ளுக்கு செல்ல முடியாமலும், அரசு உயர்நி லைப்பள்ளி மற்றும் நியாய விலை கடைக ளுக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து கடந்த செப். 20 அன்று தீக்கதிரில் செய்தி வெளியாகியிருந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்று மாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு வருவாய்த் துறையினர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் தலைமையில், வட்ட துணை ஆய்வாளர் பாரதி மோகன், சரக நில அளவர் அருண்குமார் ஆகியோர் பாதையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி னர். இதையடுத்து, இப்பகுதியில் விரைவில் சாலை அமைக்கப்படும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வட்டாட்சி யரின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக் காகவும், செய்தி வெளியிட்டு தீர்வு காண உத விய தீக்கதிர் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.