districts

கட்டளை மேட்டு வாய்க்காலை தூர்வாருக!

தஞ்சாவூர், மே 31-

     தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் அளித்தனர்.

    அந்த மனுவில், ‘‘தஞ்சாவூர் மாவட்டம்  பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி சரகத்தில்  உள்ள 18 ஊராட்சிகள் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும் என சுமார் 15,000  ஏக்கர் விவசாயம் நடைபெற்று வருகிறது.

    இதில், உய்யக்கொண்டான் நீட்டிப்பு  வாய்க்காலில் தலைப்பு மதகு வாழவந்தான்  கோட்டை ஏரி அருகில், சோழகம்பட்டி காட்டுவாரி சைபனில் ஏற்பட்டுள்ள உடைப் பின் காரணமாக, உய்யக்கொண்டான் பாச னத்திற்கு முற்றிலும் தண்ணீர் வராத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.  

    இதனால் 15 கிராமங்களில் உள்ள சுமார்  7,000 ஏக்கர் நிலம் விவசாயம் கேள்விக்குறி யாக மாறி உள்ளது. கடந்த மாதம் ஏப்.15 அன்று விவசாயிகள் சாலை மறியல் நடை பெறும் என அறிவித்ததையொட்டி, பூதலூர்  வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற  சமாதானப் பேச்சுவார்த்தை அடிப்படை யில் திருச்சி ஆற்றுப் பாசனக் கோட்டம் சார்பில் 12.04. 2003 அன்று அதிகாரிகள் ஆய்வு செய்து, விரைவில் பணி முடிக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அந்த சைபன் (சுரங்கப்பாதை)  பராமரிப்பதற்காக பெயர்க்கப்பட்டு, இது வரை எந்தப் பணியும் நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சம் ஒட்டு மொத்த விவசாயிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.  

   அதேபோல் கட்டளை மேட்டு வாய்க்கா லில் மெயின் வாய்க்காலில் முழுவதுமாக தூர்வாரப்பட வேண்டும். எனவே, உரிய நட வடிக்கை மேற்கொண்டு, பணி நடை பெற்று, விவசாய பணிகள் நடைபெறுவதை  உறுதிப்படுத்த வேண்டும்’’ எனக் கூறப்பட்  டுள்ளது.

;