மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், தமிழ்ப் பல்கலை., மாணவர்கள் கையுந்து பந்து போட்டியில் 2-ஆம் இடமும், கபடி போட்டியில் 3-ஆம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பல்கலை., துணைவேந்தர் திருவள்ளுவன் பாராட்டினார். பதிவாளர் (பொ) கு.சின்னப்பன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செ.பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.