districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்தக் கூடாது!

மயிலாடுதுறை, பிப்.27 - மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி, மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு திட்டத் தலைவர் என். வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலா ளர் பி. மாரியப்பன் தொடங்கி வைத்தார். அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.ராஜா ராமன், திட்டச் செயலாளர் எம்.கலைச்செல்வன், எஸ்.ராஜேந்திரன் மற்றும் கே.வேல்முருகன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மின் வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். மின்வாரியத்தில் ஆரம்பகட்ட காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்தக் கூடாது, ஒப்பந்த தொழி லாளர்களை அடையாளம் கண்டு நிர்வாகமே  தினக்கூலி வழங்கி பணி நிரந்தரம் செய்ய  வேண்டும். இடைக்கால நிவாரணம் ரூ.5,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.