தஞ்சாவூர், ஜூன் 1-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தஞ்சை மாநகரக் கிளை சார்பில், தஞ்சை பெசன்ட் அரங்கில், தருமபுரம் சுவாமி நாதன் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமுஎகச மாநகரத் தலைவர் பிம்பம் சாகுல் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் சீ.லெ.ஸ்ரீதர் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் தருமபுரம் சுவாமிநாதன் குறித்து பேசினார். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு குறித்து மாவட்ட செயலாளர் இரா.விஜயகுமாரும், வள்ளலார் 200 ஆண்டுகள் என்ற தலைப்பில், தமுஎகச முன்னாள் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச் செல்வனும் உரையாற்றினர்.
தருமபுரம் சுவாமிநாதன் குறித்த இசைப் பேருரையை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைத் தலைவர் முனைவர் கோ.ப. நல்லசிவம் குழுவினர் நிகழ்த்தினர். மாநகரக் குழு உறுப்பினர் சா.தமிழ் வாணனின் பாடல்கள் இசைக்கப்பட்டது. மாநகர இணை செயலாளர் க.முரளி நன்றி கூறினார்.