சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சீனிவாசன் இல்ல திருமண விழா கொரடாச்சேரி விஆர்என் திருமண மண்டபத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மணமக்கள் எஸ்.குறளரசன், ஆர்.பிரியங்கா ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ்,சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலகுழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் என்.வசந்தன் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டகுழு உறுப்பினர்கள், வெகு ஜன அரங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பி னரும், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாருமான கே.எஸ். செந்தில் நன்றி கூறினார்.