திருச்சிராப்பள்ளி, நவ.27 - தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் திருச்சி புறநகர் மாவட்ட மாநாடு ஞாயி றன்று மாலை நம்பர் 1 டோல் கேட் பகுதியில் நடந்தது. மாநாட்டிற்கு தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு புற நகர் மாவட்டத் தலைவர் தங்க ராஜ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் வின்சென்ட் துவக்கவுரையாற்றினார். மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ஹனீப் கருத்துரை வழங்கினார். புறநகர் மாவட்டப் பொருளாளர் அப்துல் ரஹ்மான், பெல் சிஐடியு பொதுச் செயலாளர் பரம சிவம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். சிறு பான்மை மக்கள் மீதான தாக்கு தல்களை தடுத்து நிறுத்த வேண்டும். வெறுப்பு பிரச்சா ரத்தை முறியடித்து இந்தியா வின் ஒருமைப்பாட்டை பாது காக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தின் புதிய தலைவராக எம்.கே. தங்கராஜ், செயலாளராக வி. அலெக்ஸ், நிர்வாகிகளாக அப்துல்ரகுமான், ஹக்கீம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். மாநிலச் செயலாளர் ராம கிருஷ்ணன் நிறைவுரையாற்றி னார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ் வர வேற்றார். நிர்வாகி முகமது பாரூக் நன்றி கூறினார்.