districts

திருச்சி முக்கிய செய்திகள்

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

புதுக்கோட்டை, ஜூலை 5 - ஆவுடையார்கோ வில் அருகே  தோட்ட வேலையின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே செவி டன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த் (28). இவர், இடையன்காடு கிராமத் திலுள்ள எம்எஸ்எம் சுல்தான் என்பவரின் வீட்டில் பணிபுரிந்து வந்தார். இந்த வீட்டி லுள்ள தோட்டத்தில் இருந்த கற்களைப் பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்காக, இரும்பு கடப்பாரையைக் கொண்டு வேலை செய்த போது, தரைவழியே சென்ற மின் வயர்களில் பட்டு மின்சாரம் பாய்ந் தது. இதில் விஜய்ஆனந்த் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.

மரக்கன்றுகள் நடல்

பாபநாசம், ஜூலை 5 - சுற்றுச்சூழல் மேம் பாட்டிற்காக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக் பள்ளி யில் மரக்கன்றுகள் நடப் பட்டன.  பள்ளி வளாகத்தில் எலுமிச்சை, கொய்யா, நாவல், கருவேப்பிலை, நெல்லி உள்ளிட்ட மரக் கன்றுகள் நடப்பட்டன. இதில் பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில், செயலர் பன்னீர்செல்வம், பொரு ளாளர் மாரிமுத்து, வட்டா ரத் தலைவர் கணேசன்,  மாவட்டத் தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரி யர் லூர்து ஜான்சன், உதவி தலைமை ஆசிரி யர் செல்வி, தாஹிரா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

கீழ கொட்டையூரில்  பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம்,  ஜூலை 5 - தஞ்சாவூர் விற்ப னைக் குழு, பாபநாசத்தை  அடுத்த கபிஸ்தலம் அருகே கீழகொட்டையூர் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி  மறைமுக ஏலம் நடந்தது.  ஏலத்திற்கு வேளாண்மை துணை இயக்குநர் (வே.வ) வித்யா தலைமை வகித்தார். விற்பனைக் கூட கண்காணிப்பாளர்  பிரியமாலினி முன்னிலை வகித்தார். இதில் கும்பகோ ணம் மற்றும் அதைச்  சுற்றியுள்ள கிராமங்க ளில் இருந்து மொத்தம் 1590 விவசாயிகள், 2054 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்ப கோணம், செம்பனார் கோவில், பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரா, மகுடஞ்சாவடி, தேனி, விருதுநகர், கொங்கணா புரம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 10 வணி கர்கள் ஏலத்தில் பங்கேற்று அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7519,  குறைந்தபட்சம் ரூ.6469, சராசரி ரூ.6889 என விலை நிர்ணயம் செய்த னர். பருத்தியின் மதிப்பு ரூ.1.4 கோடி.  இதில்  கும்பகோணம் விற்பனைக் கூட அலுவ லர்கள் மற்றும் வேளாண்  அலுவலர்கள் பங்கேற்ற னர்.

புகையிலைப் பொருட்கள் பறிமுதல் 2 கடைகளுக்கு சீல்

தஞ்சாவூர், ஜூலை 5- பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முன்னி லையில் நடைபெற்ற அதிரடி ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம்  விதிக்கப்பட்டது.  பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, ஒரத்தநாடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் இலியாஸ் ஆகியோர் முன்னிலையில், பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் மற்றும் அலுவ லர்கள், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வாட்டாத்தி கொல்லைக்காடு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, அங்குள்ள கடைகளில் அரசால் தடை செய்யப் பட்ட 5 கிலோ எடையுள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை  பறிமுதல் செய்தனர். பின்னர் இரு கடைகளுக்கும் தலா  ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இக்கடை கள் 15 நாட்களுக்கு தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டன.  மேலும் அங்குள்ள கடைகளில் விற்பனை செய்வதற் காக வைக்கப்பட்டிருந்த தரம் குறைவான, கெட்டுப் போன  உணவுப் பொருட்கள் சுமார் 50 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

கும்பகோணம் அரசு கல்லூரியில்  3 ஆம் கட்ட கலந்தாய்விற்கு அழைப்பு

கும்பகோணம், ஜூலை 5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான  இளநிலை படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 8,  11, 12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து கல்லூரி முதல்வர் அ.மாதவி வெளியிட்ட அறி விப்பில், “ஜூலை 8 அன்று காலை 9 மணிக்கு 199- லிருந்து 142  கட் ஆப் மதிப்பெண் வரை பெற்று, இக்கல்லூரிக்கு விண்ணப் பித்துள்ள மாணவ, மாணவியர்கள் மட்டும் கலந்து கொள்ள  வேண்டும்.  ஜூலை 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்களும் காலை 9  மணிக்கு, ஜூலை 3 முதல் 5 ஆம் தேதி வரை இக்கல்லூ ரிக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர்களும், ஏற்கெ னவே  இக்கல்லூரிக்கு விண்ணப்பித்து சேர்க்கை பெறாத அனைத்து மாணவ, மாணவியர்களும் கலந்தாய்வில் கலந்து  கொள்ளலாம். மேலும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களில்  தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர்த்த பகுதி - III முதன்மை  பாடங்கள் அல்லது சிபிஎஸ்இ மொழிப் பாடங்கள் தவிர்த்த  முதன்மை பாடங்களில் 400 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு கொள்ளவும்” என தெரிவித்துள்ளார்.

விபத்து இழப்பீடு வழங்காததால் ஜெயங்கொண்டம் அரசுப் பேருந்து ஜப்தி

அரியலூர், ஜூலை 5 - இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (58). இவர் கடந்த  2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று  தனது ஊருக்கு செல்வதற்காக ஜெயங்கொண் டம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டி ருந்தார். அப்போது அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து கார்த்திகேயன் மீது மோதி யதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந் தார். இதில் அவரது இரு கைகளிலும் பேருந் தின் சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் கடந்த 2019 நவம்பர் 29 அன்று ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின்  விசாரணையில் பாதிக்கப்பட்ட கார்த்திகே யனுக்கு 11,82,094 ரூபாய் இழப்பீடு தொகை யும் இழப்பீடு தொகை வழங்கும் காலம் வரை  6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க  வேண்டும் என சார்பு நீதிமன்ற நீதிபதி கடந்த 2022 அக்டோபர் 14 அன்று உத்தர விட்டார். ஆனால் அரசு போக்குவரத்துக் கழகம் உரிய இழப்பீடு வழங்கவில்லை. இந்நிலையில், கடந்த 2023 ஆகஸ்ட் 29 அன்று ஜப்தி மனு சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசார ணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி உரிய  இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நீதி மன்ற பணியாளர்கள் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், திருச்சி செல்வதற் காக நின்று கொண்டிருந்த அரசு பேருந்தி லிருந்து பயணிகளை கீழே இறக்கி விட்டு, பேருந்தை ஜப்தி செய்தனர்.

அறந்தாங்கி அரசு கல்லூரியில்  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி 

அறந்தாங்கி, ஜூலை 5 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் (பொ) பேராசிரி யர் வீ.பாலமுருகன் தலைமை வகித்தார். கல்லூரி தமிழ்த்  துறை தலைவர் முனைவர் கா.காளிதாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரி இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி.சேதுராமன், ‘வானம் வசப்படும்’ எனும்  தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  கல்லூரியின் அனைத்துத் துறை முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், கல்லூரிக் கண்கா ணிப்பாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்ற னர். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேரா.பழனி துரை நன்றி கூறினார்.

மணமேல்குடியில்  பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

அறந்தாங்கி, ஜூலை 5- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு  கூட்டம் நடைபெற்றது.  மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வட்டார வள மைய மேற்பார் வையாளர் (பொ) சிவயோகம் தலைமையில் தொடங்கியது. இப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் பத்மா தேவி   முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெக தீஸ்வரி வரவேற்றார். இந்நிகழ்வில் பட்டங்காடு குடியிருப்பில் பள்ளி செல்லா  குழந்தைகள் இருந்தால் அவர்களை கண்டறிந்து, பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் மாற்றுத் திறனாளி குழந்தைகள் அடையாளம் காணப்பட்டால் உடனடி யாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முதல் வகுப்பில் 11 மாணவர்கள் சேர்க்கப்பட்டதற்கு அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து  கொடுத்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில், வகுப் பறை செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டனர். பள்ளி இடைநிலை ஆசிரியர் செபஸ்தியான் நன்றி கூறினார்.

நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் பணியேற்பு

கும்பகோணம், ஜூலை 5- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அரிமா சங்கம் எனப்படும் நாச்சியார்கோவில் லயன் சங்கம்  பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.  இந்நிலையில், நாச்சியார்கோவில் லயன் சங்க 25 ஆம்  வெள்ளி விழா ஆண்டுக்கான புதிய பொறுப்பாளர்கள் பணி யேற்பு விழா நாச்சியார்கோவிலில் நடைபெற்றது. விழா வினை நாச்சியார் லயன் சங்க தலைவர் ராஜேந்திரன் துவக்கி  வைத்தார்.  புதிய பொறுப்பாளர்களை லயன் சங்க மாவட்ட இரண்டாம்  துணை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல் பணியில்  அமர்த்தி சிறப்புரை ஆற்றினார். புதிய உறுப்பினர்களை மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் காசி பாலசுப்பிரமணி யன் சங்கத்தில் இணைத்தார். மண்டல தலைவர் ராஜேஷ் சேவை திட்டங்களை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கி னார்.  சிறப்பாக பணியாற்றியவர்கள் லயன் சங்க உறுப்பி னர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. விழாவில், நாச்சியார்கோவில் லயன் சங்க புதிய தலைவ ராக தங்கவேல், செயலாளராக பாலாஜி, பொருளாளராக மாத வன். நிர்வாக அலுவலராக கோவிந்தராஜன், இணைச் செய லாளர் சரவணன் ஆகியோர் பணியேற்றுக் கொண்டனர்.

மக்களின் பிரச்சனைகளை தீர்க்க  கோரி போராட்டம்: சிபிஎம் முடிவு

தஞ்சாவூர், ஜூலை 5-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் ஒன்றியத்துக் குட்பட்ட கிளைச் செயலாளர்கள் கூட்டம், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.கோவிந்தராஜ் தலைமையில், வெள்ளிக் கிழமை நடைபெற்றது.  இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில் குமார், ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம்.இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள்  கே.பன்னீர்செல்வம், சி.சரிதா மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  அப்போது, தங்களுடைய கிளைகளின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்காலத்தில் தங்கள் கிராமத்தில் வெகுஜன அமைப்புகளை உருவாக்குவது குறித்தும், மக்கள் ஜீவாதாரப்  பிரச்சனையாக இருக்கக் கூடிய விபரங்கள் குறித்தும் பேசப் பட்டது. அதனடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து  கிளைகளிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

ஊரக வளர்ச்சி ஊழியர்கள் ஜூலை 22-இல் போராட்டம்

திருவாரூர், ஜூலை 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் அலுவல கத்தில், திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர்கள் மற்றும் என்.எம்.ஆர் ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) ஒன்றிய பேரவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் டி.கலியமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.காத்தலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.முரளி கோரிக் கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாநில ஒருங்கி ணைப்பு குழு உறுப்பினர் கே.ஆறுமுகம் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக ஊராட்சிகளில் பணி செய்து வருகிற உயர்நிலை  நீர் தொட்டி இயக்குநர்(OHD), தூய்மை பணியாளர்கள், தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 22 அன்று நடை பெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

மின் ஊழியர்கள் காத்திருப்பு  போராட்ட விளக்க வாயிற் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 5- காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் ஜூலை 9 அன்று மன்னார்புரத்தில் உள்ள மின்வா ரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.  இந்த காத்திருப்புப் போராட்டத்தை விளக்கி வாயிற் கூட்டம்  தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு  வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி வட்ட செயலாளர் பழனியாண்டி, வட்ட பொருளாளர் இருதயராஜ், வட்ட துணைத்தலைவர் எஸ்.கே.செல்வராஜ், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி சிறப்புரை ஆற்றினார். கோட்டத் தலைவர் ஜான்போஸ்கோ நன்றி கூறினார்.

தூர்வாரப்பட்ட குப்பைகள் அகற்றம்

தஞ்சாவூர், ஜூலை 5-  தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் கழிவுநீர் வாய்க் காலில் தூர்வாரப்பட்ட குப்பைகள் அகற்றப் பட்டன. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில்  உள்ள உணவகங்கள், தேநீர் கடைகளி லிருந்து வெளியேறும் கழிவுநீர், வாய்க்கா லில் கலந்து செல்கிறது. இதனால் வாய்க்கா லில் அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் வாய்க்கால் கள் தூர்வாரப்பட்டு, அதில் அகற்றப்பட்ட குப்பைகள் வாய்க்கால் கரைகளிலேயே இருந்தன. இதிலிருந்து துர்நாற்றம் வீசிய தால் பயணிகளும், பொதுமக்களும் மாநக ராட்சி ஆணையரிடம் முறையிட்டனர்.  இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாநகராட்சி ஆணையர் இரா.மகேஸ்வரி புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது துர்நாற்றம் வீசிய  குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தர விட்டதைத் தொடர்ந்து, குப்பைகள் உடனே  அகற்றப்பட்டன.

குறுவை நெல் பயிருக்கு  பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

குறுவை நெல் பயிருக்கு  பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தல் தஞ்சாவூர், ஜூலை 5- குறுவை நெல் பயிருக்கு, விவசாயிகள் பயிர்க் காப்பீடு  செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கிட, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் நடப்பு குறுவை சாகுபடி பயிருக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.  தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை பருவத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திட ஷீமா பொது காப்பீடு  நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் காரீப் சிறப்பு பருவத்தில் குறுவை நெல் பயிருக்கு  காப்பீடு செய்து கொள்ள ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமிய தொகை ரூ.730. ஒரு  ஏக்கருக்கான காப்பீடுத் தொகை ரூ.36,500. இத்திட்டத்தின் கீழ் பிரீமியம் செலுத்திட கடைசி நாள் 31.07.2024 ஆகும்.  இத்திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள்  கடன்பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும்  மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி-1434), வங்கி புத்தகத்தின் முதல் பக்க ஒளிநகல், ஆதார்  அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்ய வேண்டும்.  காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, காப்பீடு  செய்தபின் அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று கொள்ள வேண்டும். எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு, தாமதமின்றி உரிய  காலத்தில் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் அனைவரும்  பயனடையலாம். கடைசிநேர இன்னல்களை தவிர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் தவறி விழுந்து காணாமல் போன மீனவர் குடும்பத்துக்கு அறக்கட்டளை உதவி

தஞ்சாவூர், ஜூலை 5- கடலில் தவறி விழுந்து காணாமல் போன  மீனவர் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி யாக வெள்ளாடு வழங்கிய அறக்கட்ட ளைக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூன் 23  ஆம் தேதி காலை நாகப்பட்டினம் விஜய குமார் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில், விஜயராகவன், அந்தோணி, ஆரோக்கியம், பழனிச்சாமி ஆகிய நால்வ ரும் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்தது. இதில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மல்லிப்பட்டினம் முகமதியர் தெருவைச் சேர்ந்த அந்தோணி (43) என்ற மீனவரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.  இந்நிலையில், மீனவர் அந்தோணியை இழந்த அவரது குடும்பத்தினர், வாழ்வாதா ரத்திற்கு சிரமப்பட்டு வருகிற நிலையறிந்து, பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் ஓம்கார் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் பாலாஜி சார்பில் ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு மாதத்திற்கு தேவை யான அரிசி, மளிகைப் பொருட்கள், இரண்டு  வெள்ளாடுகள் ஆகியவை வழங்கப்பட்டன.  இதற்கான நிகழ்ச்சி மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள நாட்டுப் படகு மீனவர்  சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு  மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணி கண்டன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தி னர் தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் ஏ.தாஜுதீன் பேசினார்.  இதில் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மீன் துறை ஆய்வாளர் மல்லிப் பட்டினம் கெங்கேஸ்வரி, ஓம்கார் பவுண்டே ஷன் மேலாளர் அன்பு, சமூக ஆர்வலர் ரகு மத்துல்லா மற்றும் திரளான மீனவர்கள், மீன வர் அந்தோணியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.