districts

img

கூட்டுறவு வார விழா: உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர், நவ.14 - கூட்டுறவு சங்க செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஆண்டு தோறும் நவ.14  முதல் 20 வரை கூட்டுறவு வார விழா நடைபெறுவது வழக்கம்.  அதனை தொடர்ந்து, நவ.14 அன்று பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியர் க.கற்பகம் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன் உட்பட அனைத்துப் பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றனர்.  பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபா கரன், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணா துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம், கால்நடை சிகிச்சை முகாம், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கவி தைப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, சங்க  பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் சிறந்த சங்கங்களுக்கு நவ.17 அன்று எளம்பலூர் சாலையிலுள்ள கர்ணம் சுப்ர மணியம் சகுந்தலா மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர்,  அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பி னர்கள் தலைமையில் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.