பாபநாசம், ஜுலை 29 -
நிலக்கரி பயன்பாட்டை இந்தியா படிப்படியாக குறைக்கும் என்று பன் னாட்டு அரங்கில் வாக்குறுதி அளித்து விட்டு நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு அனு மதி கொடுத்திருப்பது பிரதமர் போடும் இரட்டை வேடம் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தின் வேளாண்மையை மொத்தமாக அழிக்க என்எல்சி நிறுவனம் துடித்துக் கொண்டி ருக்கிறது. விரைவில் தனியார்மயமாக வுள்ள என்எல்சி நிறுவனத்திற்குத் தமிழ்நாடு அரசு உறுதுணையாக செயல் படக் கூடாது. ஏற்கெனவே என்எல்சி நிறுவனம் எடுத்த நிலங்களுக்கான, உரிய இழப்பீட்டை அது வழங்க வில்லை.
மேலும் வாக்களித்தபடி நிலத்தை கொடுத்தவர்களுக்கு என்எல்சி நிறுவனம் வேலையும் வழங்கவில்லை. என்எல்சி நிறுவனம் அந்திம காலத் தில் உள்ள தொழில் நுட்பத்தைக் கை விட்டு விட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் களை நோக்கிப் பயணப்பட வேண்டும்.
பருவநிலை மாற்றம் குறித்த 2021 கிளாஸ்கோ மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் மோடி, நிலக்கரி பயன்பாட்டை இந்தியா படிப்படியாக குறைக்கும் என்று பேசி னார். இவ்வாறு பன்னாட்டு அரங்கில் வாக்குறுதி அளித்து விட்டு நெய் வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது இரட்டை வேடம் அல்லவா? தமிழ்நாட்டின் வளத்தை அழிக்கத் தொடர்ந்து செயல்படும் என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத் துவதை தமிழ்நாடு அரசு உடனடி யாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
வெள்ளியன்று நடந்த போராட்டத்தின் போது காயமடைந்த காவல்துறையி னர் விரைந்து நலம் பெறப் பிரார்த்தனை செய்கிறேன். இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்ட பாமகவினரை உடனே விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள் கிறேன் என தெரிவித்துள்ளார்.