districts

திருச்சி தொழிலாளர் நல அலுவலகத்தில் துணை ஆணையர் பணியிடம் ரத்து ரத்து உத்தரவை திரும்பப் பெற சிஐடியு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.9- திருச்சி தொழிலாளர் நல அலுவல கத்தில் தொழிலாளர் நல துணை ஆணை யர் (டிசிஎல்) பணியிடம் ரத்து செய்யப்  பட்டதை மாற்றியமைக்கக் கோரி சிஐ டியு சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச் சர், தொழிலாளர் நலத்துறை ஆணையர், திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன் அனுப்பி உள்ள கடிதத்தில் தெரி வித்திருப்பதாவது:  திருச்சி மன்னார்புரத்தில் தொழிலாளர் நல அலுவலகம் செயல்படுகிறது. இதில்  நலவாரிய அதிகாரி தொழிலாளர் நல அலு வலர் (எல்.ஓ), தொழிலாளர் நல உதவி ஆணையர் (ஏசிஎல்), தொழிலாளர் நல  துணை ஆணையர் (டிசிஎல்), தொழிலாளர்  நல இணை ஆணையர் (ஜெசிஎல்) மற்றும்  கிராஜூட்டி வழக்கு நடத்தும் அதிகாரி என  5 பதவி இடங்களும் அதற்கான பணியா ளர்களும் உள்ளனர்.  இவ் அலுவலகம் டிசிஎல், ஜெசிஎல் என்பது திருச்சி, புதுக்கோட்டை, பெரம்ப லூர், அரியலூர் மாவட்டங்களுக்கும் உண்  டானது.  இந்த நிலையில், கடந்த இரு ஆண்டு களாக திருச்சியில் ஏசிஎல், டிசிஎல், ஜெசிஎல் பதவிக்கான பணியிடங்கள் காலி யாக உள்ளன. தஞ்சை, திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகள் பொறுப்பேற்று திருச்  சிக்கு வாரம் ஒரு நாள் மட்டும் வந்து வழக்கு நடத்துகிறார்கள். இதனால் வழக்குகள் முடிவடையாமல் நிலுவையில் உள்ளன.  எனவே, இப்பணியிடங்களை பூர்த்தி  செய்திட வேண்டும் என்று சிஐடியு சார்பில்  சென்னை கமிஷ்னர் மற்றும் தொழிலாளர் நல அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாதம் சென்னை தொழிலாளர் ஆணையர் ஒரு உத்தரவு  போட்டுள்ளார். அதில், திருச்சி டி.சி.எல் பத விக்கான ரத்து செய்யப்பட்ட பணியிடம் ஈரோட்டிற்கு உருவாக்கப்படுவதாகவும், திருச்சியில் உள்ள டிசிஎல் பணியிடம் அதற்  கான ஊழியர்கள் உட்பட ஈரோட்டிற்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருச்சி டிசிஎல் வழக்குகளை கிராஜூட்டி வழக்கை விசாரிக்கும் அதிகாரி விசா ரிப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே கிராஜூவட்டி வழக்குகள் நூற்றுக்கணக்கில் நிலுவையில் உள்ளன.  டிசிஎல் வழக்கையும் சேர்த்து விசாரிப்ப தால், இரண்டு பகுதி வழக்குகள் முடிவடை யாமல் தேக்கமாகும் சூழ்நிலை உள்ளது.  எனவே, திருச்சி முக்கியத்துவம் உணர்ந்து டிசிஎல் பணியிடம் ரத்து செய்த  உத்தரவை திரும்பப் பெற வேண்டும். டிசிஎல் பதவிக்கான பணியிடம் திருச்சிக்கு வழங்கியும் நீண்ட காலமாக காலியாக  உள்ள ஏசிஎல், டிசிஎல், ஜெசிஎல் பணி யிடங்களை பூர்த்தி செய்திடவேண்டும்.  இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித் துள்ளார்.

;