districts

img

பெரம்பலூர் நகர் போக்குவரத்து ஆய்வாளர் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சிஐடியு புகார்

பெரம்பலூர், பிப்.15 -  பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை  தோறும் நடைபெறும் மக்கள் சந்திப்பு முகாம் நடைபெறுகிறது இந்த முகாமில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷியாமளாதேவியிடம் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் (சிஐடியு) கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் நகர் போக்குவரத்து ஆய்  வாளராகப் பணிபுரியும் சுப்பையா ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் ஆட்டோ தொழிலாளர்களைக் குறி வைத்து வாகன எண்ணைக் குறித்து வைத்து விதிமுறைக்குப் புறம்பாக அப ராதம் விதித்து வருகிறார். ஆட்டோ ஓட்டு நர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தி கேலி செய்கிறார்.  இது குறித்து ஏற்கனவே மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கப்பட்டது. ஆனால், அவரது நட வடிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. அவரிடம் இது போன்ற நட வடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனக்  கூறியதற்கு நீங்கள் எங்கு வேண்டுமா னாலும் புகாரளிக்கலாம் என்னை ஒன்றும்  செய்ய முடியாது என ஆட்டோத் தொழி லாளர்களையும் சாலையோர வியாபாரி களையும் ஒழிக்காமல் விடமாட்டேன் என  மிரட்டி வருகிறார். எனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரி வித்துள்ளனர்.  மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்  கண்காணிப்பாளர், நடவடிக்கை எடுப்ப தாகக் உறுதியளித்துள்ளார்.