குலசேகரம், டிச.25- குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோ மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா கல்லூரி முதல்வர் டாக்டர்.என்.வி. சுகதன் தலைமையில் நடைபெற்றது. பி.ஜி.மாணவர் மாலோலன் வரவேற்று பேசினார்.போதகர் ஜாண் மேத்யூ தும்புங்கல் கிறிஸ்மஸ் பண்டிகை குறித்து உரையாற்றினார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிக்கான போட்டி கள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் ற்றி. அஜயன் பரிசுகள் வழங்கினார். திவ்யா மேனன் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாட்டினை டாக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் மாணவ மாணவிகள், கல்லூரி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.