கும்பகோணம், ஆக.18-
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று வழங்கும் முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். சர்ச் வளாகத்தில் நடை பெற்றது.
முகாமில் பல்வேறு வகையை சேர்ந்த மாற்றுத் திற னாளிகள் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவர் கள் பரிசோதனை செய்ததன் அடிப்படையில் புதிய அடை யாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற வழிகாட்டவும், உதவி செய்யவும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போருக்கான சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பழ.அன்புமணி தலைமையில் 15 பேர் கொண்ட குழு செயல்பட்டது.