பாபநாசம், பிப்.26- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள அன்பு பேக்க ரியில் கேக் திருவிழா கண்காட்சி நடைபெற்றது. தொட ர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்றன. இந்த கண்காட்சி யில் ரோல்கேக், பிளம்கேக், பிளாக்பாரஸ்ட், பிரஸ் கிரீம்கேக் உள்பட 100-க்கும் மேற்பட்ட வகை வகை யான கேக்குகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மணி நேரத்திற்கும், வெவ்வேறு வகை யான புதிய சுவையில் கேக்குகள் தயார் செய்யப் பட்டது. குறிப்பாக இந்த கேக் திருவிழாவில், தமிழக சினிமா துறையின் முன்னணி நடிகர்களான அஜித் மற் றும் விஜய்யின் உருவங்கள் பொறிக்கப்பட்ட இரண்டு உருவங்களும் சேர்ந்து, மொத்தம் 120 கிலோ எடை, சுமார் 6 அடி ஆள் உயரம் கொண்ட கேக்குகளும் கண் காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்தக் கண்காட்சியை தமிழகத்தின் பல்வேறு பகுதி யில் உள்ள பேக்கரி கூட்டமைப்பு மற்றும் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள், ஏராளமான விஜய் மற்றும் அஜித் ரசிகர் களும், பொதுமக்களும் கண்டு, கேக்குகளை உண்டு மகிழ்ந்தனர்.