districts

img

காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் கொடுக்காதீர்! சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு

திருச்சிராப்பள்ளி, மே 29-

     சத்துணவு திட்டத்தில் உள்ள 52 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்  டும், காலை சிற்றுண்டி திட்டத்தை வெளி முகமை மூலம் ஊதியத்தை நிர்ணயிப்பதை கைவிட்டு, சத்துணவு மையங்கள் மூலம்  சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சத்தியவாணி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் அல்போன்ஸா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத் தலைவர்  சிராஜூதீன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் பால்பாண்டி ஆகியோர் விளக்கிப் பேசினர். மாவட்டப் பொருளாளர் கிரேஸிலில்லி நன்றி கூறினார்.

பெரம்பலூர்

    பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் பூ.மணிமேகலா தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆ.கொளஞ்சிவாசு விளக்கிப் பேசி னார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், சிபிஎம் குன்னம் வட்டச் செயலாளர் சி.செல்லமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் சோ.செல்வராணி நன்றி கூறினார்.