districts

img

ஊர் மக்கள் பங்கேற்புடன் நடந்த ஆரியச்சேரி அரசுப் பள்ளி ஆண்டு விழா

கும்பகோணம், மார்ச் 28- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் ஆரி யச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அப்பகுதியைச் சுற்றியுள்ள கீரனூர், பருத்திச்சேரி, செம்மங்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.  ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியின் முப்பெரும் விழாவை,  ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு  கொண்டாடினர். முன்னதாக பள்ளி தலைமை  ஆசிரியர் மேகலா வரவேற்றார். கீரனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பால திரிபுர சுந்தரி தனசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சாரநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரா ரவிச் சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். திருவிடைமருதூர் வட்டார கல்வி அலு வலர் ராஜேந்திரன் மற்றும் நிவேதா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் கோ அமுதா  ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் திறனறிவு போட்டி, கலை  நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள்,  நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி களில் மாணவர்கள் பங்கேற்றனர். போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்பட்டன.  அரசுப் பள்ளிக்கு உதவிய புரவலர் களுக்கும், பள்ளி வளர்ச்சிக்கு உதவிய அனைத்து அரசியல் கட்சி மற்றும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்து உதவிய  ஆரியச்சேரி கீழத்தெரு, ஜீவா நகர்,  கீரனூர் மணவெளித் தெரு நாட்டாண்மை  கிராம பஞ்சாயத்தார் மற்றும் ஊர் பொது மக்களுக்கும் பள்ளி ஆசிரியர் மா.கலைச் செல்வன் நன்றி தெரிவித்தார்.

;